வணிகம்

தக்காளி விலை கிடுகிடு உயர்வு -காரணம் என்ன?

தக்காளி விலை கிடுகிடு உயர்வு -காரணம் என்ன?

Veeramani

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைவால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

சென்னையில் நாளொன்றுக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து 200 டன் தக்காளி தேவைப்படுவதாக கூறும் வியாபாரிகள், தற்போது 700 டன் அளவிற்கே தக்காளி வருவதாக தெரிவிக்கின்றனர். கோடைக்காலம் என்பதால் அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால், கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விலையில் ஒரு கிலோ பெங்களூரு தக்காளி 70 ரூபாய்க்கும், நாட்டுத் தக்காளி 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.



சில்லறை விற்பனையில் பெங்களூரு தக்காளி 85 ரூபாய்க்கும் நாட்டுத் தக்காளி 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனைப்போலவே பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளன. அடுத்த இரண்டு வாரங்களுக்கு தக்காளி விலை அதிகமாகவே இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.