வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்களின் இணைப்புக்கு தொலைத்தொடர்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஐடியா செல்லுலார் நிறுவனமும் இங்கிலாந்தைச் சேர்ந்த வோடபோன் நிறுவனமும் இணைய முடிவு செய்தன. இதற்கான நடவடிக்கைகள் நீண்டகாலமாக நடந்து வந்த நிலையில், வோடபோன் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் கட்டணமாக 3 ஆயிரத்து 926 கோடியை செலுத்த தொலைத் தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
ஐடியா செல்லுலார் நிறுவனம் 3 ஆயிரத்து 342 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளுடன் இருநிறுவனங்களின் இணைப்புக்கு தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன்மூலம், ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நாட்டின் மிகப் பெரிய தொலைபேசி நிறுவனமான வோடபோன் ஐடியா நிறுவனம் உருவாகவுள்ளது.