இந்தியாவில் செயல்பட்டு வரும் விவோ நிறுவனம் வரி ஏய்ப்புக்காக ரூ.62,476 கோடியை இந்தியாவில் இருந்து சீனாவுக்கு அனுப்பு இருக்கிறது. கடந்த சில நாட்களாக விவோ மற்றும் இதன் தொடர்புடைய நிறுவனங்களின் சோதனை அடிப்படையில் இந்த தகவலை அமலாக்க துறை வெளியிட்டிருக்கிறது.
விவோ நிறுவனத்தின் மொத்த வருமானம் 1.25 லட்சம் கோடி ரூபாய். இதில் பாதிக்கு மேலான தொகையை முறைகேடாக சீனாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் எந்த காலகட்டத்தில் இந்த தொகை அனுப்பப்பட்டது என்னும் தகவலை அமலாக்கதுறை வெளியிடவில்லை. இதற்காக 23 நிறுவனங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்புடைய சீனர்கள் மூவர் இந்தியாவில் இருந்து வெளியேறிவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வளவு அதிக தொகை வெளியே அனுப்பபட்டிருப்பதால் இந்தியா நிறுவனங்களின் செயல்பாட்டில் நஷ்ட கணக்கு காண்பிக்கப்பட்டிருக்கிறது. இது வரிஏய்ப்புகான நடவடிக்கை என்றும் அமலாக்க துறை தெரிவித்திருக்கிறது. விவோ மொபைல் நிறுவனத்துக்கு சம்பந்தமான 48 இடங்களில் ஜூலை 5-ம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
விவோ நிறுவனம் நாங்கள் இந்திய சட்டப்படியே செயல்படுகிறோம் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் விவோ நிறுவனத்தின் இந்திய மற்றும் சீன உயரதிகாரிகள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை தகவலை மறைக்கும் முயற்சியில் இருந்தனர் என அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.
இந்த சோதனையில் 119 வங்கி கணக்குகளில் உள்ள 465 கோடி ரூபாய் முடக்கப்பட்டிருக்கிறது. தவிர 73 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் 2 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டிருக்கிறது.