வணிகம்

இந்தியாவில் செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம்- அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

இந்தியாவில் செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம்- அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

EllusamyKarthik

பிரதமர் மோடியின் சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இந்தியாவில் தொழில்துறை முதலீடு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டி மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று தான் PLI எனப்படும் உற்பத்தியுடன் அடிப்படையிலான ஊக்குவிப்பு தொகை வழங்கும் திட்டம்.

இந்த திட்டத்தின் மூலமாக செல்போன் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க செய்ய வேண்டுமென இந்திய அரசு விரும்புகிறது. அதற்காக விதிமுறைகளை தளர்த்தி பெரும் அளவிலான முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது. 

‘சர்வதேச மற்றும் உள்நாட்டு அளவில் மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் பி.எல்.ஐ திட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது’ என தெரிவித்துள்ளார் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். 

பாக்ஸ்கான், விஸ்டரான், பெகட்ரான், லாவா, டிக்சான், மைக்ரோமேக்ஸ் என சுமார் 22 நிறுவனங்கள் செல்போன் நிறுவனங்களுக்கு தேவையான செல்போன் மற்றும் அதற்கான உதிரிபாகத்தினை உற்பத்தி செய்ய இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளன. இதில் வெளிநாட்டு நிறுவனங்களும் அடங்கியுள்ளன.  இதன் மூலம் இந்த நிறுவனங்கள் சுமார் பதினோரு ஆயிரம் கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் சுமார் பதினோரு லட்சம் கோடியிலான செல்போன்கள் உற்பத்தி செய்யப்படும் எனவும் அரசு எதிர்ப்பார்கிறது. இதன் மூலமாக பல லட்சம் பேர் வேலைவாய்ப்பையும் பெறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது மத்திய அரசு.