வணிகம்

‘அதானி குழுமத்தை விசாரியுங்கள்’ - நிதியமைச்சருக்கு திரிணாமூல் எம்.பி மஹுவா மொய்த்ரா கடிதம்

‘அதானி குழுமத்தை விசாரியுங்கள்’ - நிதியமைச்சருக்கு திரிணாமூல் எம்.பி மஹுவா மொய்த்ரா கடிதம்

Veeramani

அதானி குழுமத்தை விசாரிக்குமாறு மத்திய நிதி அமைச்சருக்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா கடிதம் எழுதியுள்ளார்.

அதானி குழும நிறுவனங்களில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தில், இந்த நிறுவனங்களில் கணிசமாக கவனம் வைத்திருக்கும் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடுகள் (எஃப்.பி.ஐ) குறித்து அதானி குழு நிறுவனங்களை விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூலை 19 ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதித்துறை அமைச்சர் இணை பங்கஜ் சவுத்ரி, நாட்டின் மிகப்பெரிய சந்தை கட்டுப்பாட்டாளர் அதானி குழுநிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றாதது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.