வணிகம்

பட்ஜெட் அறிவிப்பு: மாத ஊதியம் பெறுபவர்கள் செலுத்த வேண்டிய வரி எவ்வளவு?

பட்ஜெட் அறிவிப்பு: மாத ஊதியம் பெறுபவர்கள் செலுத்த வேண்டிய வரி எவ்வளவு?

webteam

மாதச் சம்பளம் பெறுபவர்கள் கட்ட வேண்டிய வருமான வரியில் பட்ஜெட் அறிவிப்பால் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

உதாரணமாக, மாத ஊதியதாரின் ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் என எடுத்துக் கொள்வோம். இதில், அரசு அனுமதித்துள்ள சேமிப்பு உள்ளிட்ட வரி விலக்குக்கான செலவுகளைக் கழித்து அவர் வரி செலுத்த வேண்டிய தொகை ரூ.3.5 லட்சமாக இருக்கும். இந்த தொகைக்கு அவர் இதுவரை ரூ.5,150 வரி செலுத்தி வந்தார். தற்போது ஆண்டுவருமானம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை கொண்டவர்களுக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் செலுத்த வேண்டிய ரூ.5,150-லிருந்து ரூ.2,575ஆகக் குறையும். அதேசமயத்தில் ஆண்டுவருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் கொண்டவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதமும், ஒரு கோடிக்கு மேல் வருமானம் கொண்டவர்களுக்கு கூடுதலாக 15 சதவீதமும் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.