கொரோனா அச்சம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்ததால் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலையிலேயே வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ் 3,090 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 29,687 புள்ளிகளானதால் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. பங்குச் சந்தைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் 45 நிமிடம் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 966 புள்ளிகள் சரிந்து 8,624 புள்ளிகளாக குறைந்தது.
கடந்த 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் பங்குச்சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. பங்குச்சந்தைகள் மேலும் 5% வீழ்ச்சியடைந்தால், பங்கு வர்த்தகம் முழுமையாக நிறுத்தப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தால், பங்குச்சந்தை வர்த்தகம் மீ்ண்டு எழும் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்திய பங்குச் சந்தைகள் கடந்த சில நாட்களாகவே கடும் வீழ்ச்சியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.