வணிகம்

வங்கிக் கடன் வட்டியில் மாற்றமில்லை - ரிசர்வ் வாங்கி

வங்கிக் கடன் வட்டியில் மாற்றமில்லை - ரிசர்வ் வாங்கி

Sinekadhara

வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை. மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கை ஆய்வுக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டிவிகிதம் தொடர்ந்து 4 சதவீதமாகவே நீடிக்கும். இதேபோல் ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் செய்யும் டெபாசிட்டிற்கான வட்டியும் 3.35 சதவீதமாகவே தொடரும். கொரோனா இரண்டாம் அலை அதிகரிக்கும் நிலையில் உணவு பொருட்கள் மற்றும் விலைவாசியை கருத்தில்கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால் வீடு, வாகனக் கடன் வட்டி பழைய அளவிலேயே நீடிக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.