இந்தியாவில் ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டு 82 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
1935ம் ஆண்டு இதே நாளில்தான் ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் தனியார் வங்கியாக கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கி, பின்னர் 1937ல் மும்பைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 5 கோடி ரூபாய் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கியில் இரண்டு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே அரசின் பங்களிப்பாக இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1949ம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ம் தேதி ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை மத்திய அரசின் வங்கியாகவும், வங்கிகளை முறைப்படுத்தி கட்டுப்படுத்தும் அமைப்பாகவும் ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது