ரூ.50 கோடிக்கும் மேலான வங்கிக் கடன்களைப் பெறுவதற்கு பாஸ்போர்ட் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் கடன் வாங்கி மோசடி வழக்குகளில் சிக்கி கொள்பவர்கள் மீது விரைவில் நடவடிக்கைகள் எடுக்க முடியும் எனவும். வங்கியில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதையும் தடுக்க முடியும் என நிதிச்சேவைகள் செயலர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளர்.
வங்கியில் இனி புதிதாக கடன்பெறுபவர்களின் பாஸ்போர்ட் தகவல்கள் 45 நாட்களுக்குள் பதிவு செய்யப்படும். நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி, விஜய் மல்லையா, ஜதின் மேத்தா போன்றவர்கள் கடனைத் திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல ரூ.50 கோடிக்கு மேலான வாராக் கடன்களில் மோசடி நிகழ்வதை தடுக்க முடிவு எடுக்கப்படும். கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் முறைகேடு செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்க ஏதுவாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை. வெளிநாட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கும் நபர்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வங்கிகள் தகவல் தெரிவிக்கவும் பாஸ்போர்ட் விவரம் உதவியாக இருக்கும் என்பாதல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.