மொபைல் வாலட்டுகள் மூலம் நடக்க கூடிய பணப்பரிமாற்றங்களின் அளவு இன்னும் 5 ஆண்டுகளில் 32 லட்சம் கோடி ரூபாயை தொடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல சந்தை ஆலோசனை நிறுவனமான Deloitte இதைத் தெரிவித்துள்ளது.
மேலைநாடுகளில் அதிகமானோர் மொபைல் வாலட் ஆப்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்றாலும், இந்தியாவில் இப்போதுதான் இதன் பயன்பாடு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முக்கியமாக பேடிஎம் (paytm) அள்ளித் தந்த ஆஃபர்கள் இளைய தலைமுறையினரை மொபைல் வாலட் பக்கம் அதிகம் ஈர்த்தது. வங்கிக் கணக்கில் பணத்தை போட்டு வைத்திருப்பதுபோல பணத்தை டிஜிட்டல் முறையில் மொபைல் வாலட்டில் வைத்திருக்க முடியும். இதற்கு ஸ்மார்ட் போனும், அதில் இணைய வசதி இருந்தால் போதுமானது.
ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு அதிகரித்து வருவதும், மொபைல் ஃபோன் இணையதள வசதி பரவலாவதும் மொபைல் வாலட் பணப்பரிமாற்றம் ட்ரெண்டானதுக்கு காரணம் என Deloitte தெரிவித்துள்ளது. எனினும் மின்னணு பணப்பரிமாற்றத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துவது அவசியம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.