வணிகம்

ஆயுள் காப்பீட்டு பிரீமியம் தொகை 20 சதவிதம் உயர வாய்ப்பு

ஆயுள் காப்பீட்டு பிரீமியம் தொகை 20 சதவிதம் உயர வாய்ப்பு

jagadeesh

அடுத்த மாதத்திலிருந்து டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடுகளுக்கான கட்டணங்கள் 20 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காப்பீடுகளில் ஒரு வகையான டெர்ம் பாலிசிகளில் குறைந்த ஆண்டு பிரிமியத்தில் அதிக தொகைக்கு காப்பீடு வசதியை நிறுவனங்கள் அளிக்கின்றன. ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஒரு கோடி ரூபாய் வரை காப்பீடு பெறும் வசதி, இளவயது அடிப்படையில் வழங்கப்படுகிறது. டெர்ம் பாலிசிகளின் இழப்பீட்டை வழங்க வேறு நிறுவனங்களுடன் காப்பீடு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து சேவையை அளிக்கின்றன.

இந்நிறுவனங்களின் சேவை ரீ-இன்சூரன்ஸ் எனப்படுகிறது. வயது அடிப்படையில் மருத்துவ பரிசோதனை இல்லாமலும் வழங்கப்படும் இந்த காப்பீட்டில், இழப்பீடு தொகை அதிகம் தரப்படுவதால் தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாகக் கூறி, கமிஷனை ஒப்பந்த நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இதனால், மருத்துவ பரிசோதனையை கட்டாயப்படுத்த காப்பீடு நிறுவனங்கள் முடிவு செய்து அடுத்த மாதம் முதல் அதை அமல்படுத்தவுள்ளன.

இதனால் டெர்ம் பாலிசி பிரீமியம் 20 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.