வணிகம்

எல்.ஐ.சி பங்குகளை விற்க முடிவு - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

எல்.ஐ.சி பங்குகளை விற்க முடிவு - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

webteam

பங்குச் சந்தைகளில் புதிய பங்கு விற்பனை மூலம் எல்.ஐ.சியின் பங்குகளை விற்க முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

எல்.ஐ.சி நிறுவன ஆரம்ப பங்கு வெளியீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மேலும், பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா பங்குகளை விற்கும் அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிலுவையில் உள்ள பல அரசு நிறுவன பங்குகளை விற்கும் நடவடிக்கை தொடரும். ஒரு காப்பீடு நிறுவனம், 2 பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும்.

அரசு வங்கிகளுக்கு மூலதன நிதியாக கூடுதலாக ரூ.20 ஆயிரம் கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு முடக்கப்பட்டுவிட்டால் முதலீட்டாளர்கள் சிக்கலின்றி முதலீட்டை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49% -74% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.