இதுவரை யாரும் வழங்காத வகையில் ரூ.1500க்கு 4ஜி தொழில்நுட்பத்தில் செயல்படும் ஸ்மார்ட்போனை தயாரித்து களமிறக்க உள்ளது ஜியோ நிறுவனம்.
இதற்காக ஸ்பெரட்ரம் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள ஜியோ, ரூ.1500க்கு 4ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விளம்பரத்தையும் செய்து வருகிறது. இந்த 4ஜி போனில் மற்ற ஸ்மார்ட்போன்களை போல், வீடியோ சாட், இன்டர்நெட் வசதிகள், ஆப்ஸ் வசதிகள் இருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதி மற்றும் எஸ்எம்எஸ் வசதிகள் மட்டுமே இருக்கும் என ஜியோ தெரிவித்துள்ளது. வாய்ஸ் கால் மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு ஜியோ தரும் வரப்பிரசாதம் இந்த ஸ்மார்ட்போன்.
முன்னதாக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் பாரத் 1 என்ற பெயரில் ரூ.1999 க்கு ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது..........