வணிகம்

புதிய நிபந்தனை: தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே டேர்ம் இன்ஷூரன்ஸ்

புதிய நிபந்தனை: தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே டேர்ம் இன்ஷூரன்ஸ்

webteam

கொரோனா காரணமாக காப்பீட்டு நிறுவனங்கள் அதிக க்ளைம் கொடுக்க வேண்டி இருக்கிறது. அதனால், புதிதாக டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க நினைப்பவர்களுக்கு தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே பாலிசி கிடைக்கும் என இரண்டு காப்பீட்டு நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன.

மேக்ஸ் லைஃப் மற்றும் டாடா ஏ.ஐ.ஏ ஆகிய நிறுவனங்களும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என அறிவித்திருக்கின்றன. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் தேவை எனில், இரு டோஸ் தடுப்பூசியை போட்டிருக்க வேண்டும் என விதிமுறையை மாற்றி இருக்கிறது. டாடா ஏஐஏ நிறுவனம் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவேண்டியது அவசியமாகிறது என காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இரு காப்பீட்டு நிறுவனங்கள் புதிய விதிமுறையை பின்பற்ற இருப்பதால் மற்ற காப்பீட்டு நிறுவனங்களும் இதேபோல விதிமுறையை கொண்டுவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் பல காப்பீட்டு நிறுவனங்கள் இதேபோல புதிய விதிமுறைகளை கொண்டுவரக்கூடும் எனவும் தெரிகிறது.

தற்போது தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடுவதற்கு 84 நாட்கள் கால அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஒருவர் காப்பீடு வேண்டும் என முடிவெடுத்தாலும் தடுப்பூசிக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. அதேசமயத்தில் காப்பீட்டு தேவைக்காகவாவது தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வரவேண்டும்.

டெர்ம் இன்ஷூரன்ஸ் என்பது ஒருவரது இறப்புக்குப் பிறகு, வாழ்வாதாரத்துக்கு அவரை நம்பியிருந்த குடும்பத்தினருக்கு மிகவும் பயன்தரக் கூடியது என்பது கவனிக்கத்தது. கொரோனா பேரிடர் காலத்தில் எவருக்கும் மருத்துவ ரீதியில் ஆபத்து நேரலாம் என்பதால் மக்களிடம் டெர்ம் இன்ஷூரன்ஸின் முக்கியத்தும் உணரப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.