வணிகம்

6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த இன்ஃபோசிஸ் பங்குகள்

6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த இன்ஃபோசிஸ் பங்குகள்

webteam

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பங்குச் சந்தையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு மிகவும் குறைந்துள்ளது.

கடந்த இரண்டு காலாண்டுகளில் இன்ஃபோசிஸ் தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக்கும், தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராயும் நிதி மோசடிக்காக சில தகவல்களை மறைத்துள்ளனர் என அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களே குற்றம்சாட்டியுள்ளனர். சில நிறுவனங்களுடன் கூட்டு வர்த்தகம் தொடர்பான தகவல்களை தவறாகவும், திரித்தும், மறைத்தும் பங்குச் சந்தைகள் உள்ளிட்ட சட்டரீதியான அமைப்புகளுக்கு அளித்திருப்பதாகவும் தலைமை அதிகாரிகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது மோசடிகளை ஆடிட்டர் குழுவுக்கும், இன்ஃபோசிஸ் நிறுவன குழுவுக்கும் கூட தெரியாமல் தலைமை அதிகாரிகள் பார்த்துக்கொண்டதாகவும் அவர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தப் புகார் குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அறிக்கையை வெளியிட்டது. 

இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு மிகவும் குறைந்துள்ளது. தற்போது இந்தப் பங்குகளின் மதிப்பு 16 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. அதாவது தற்போது அந்த நிறுவனத்தின் பங்குகள் 645 ரூபாய் நிலையை அடைந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் பங்குகளின் வர்த்தகம் 14.78 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதிக்கு பிறகு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு குறைவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.