இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 2ஆவது வாரமாக கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை குறைந்து 59 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது. இதேபோல தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 150 புள்ளிகள் வரை குறைந்து 17 ஆயிரத்து 500க்கு கீழ் ஆக வர்த்தகமானது. சர்வதேச சந்தை சூழல்களை ஒட்டியே இந்திய சந்தைகளிலும் சரிவு காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 88.70 டாலராக அதிகரித்துள்ளது.