வணிகம்

வீட்டு கடன்களுக்கான வட்டியை குறைத்தது எஸ்பிஐ..!

வீட்டு கடன்களுக்கான வட்டியை குறைத்தது எஸ்பிஐ..!

webteam

எஸ்பிஐ வங்கி வீட்டு கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

இந்த மாதம் 7-ஆம் தேதி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி (ரெப்போ) 6.50 சதவீதத்திலிருந்து 6.25  சதவீதமாக குறைக்கப்பட்டது. அதாவது 0.25 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டது. ஒன்றரை வருடங்களுக்கு பிறகு ரெப்போ வட்டியை சமீபத்தில் ரிசர்வ் வங்கி குறைத்தது.

இந்நிலையில் இந்தியாவின் பெரிய வங்கியான எஸ்பிஐ, வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது குறைத்துள்ளது. அதாவது வீட்டு கடன்களில் ரூ.30 லட்சம் வரையிலான கடன்களுக்கு 0.5 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய 8.75 சதவீத வட்டியிலிருந்து வீட்டுக் கடன் வட்டி 8.70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ தலைவர் ரஞ்னிஷ் குமார் “ எஸ்பிஐ வங்கியில் தான் அதிகப்படியான வீட்டு கடன்கள் உள்ளன. இதனால் இந்த வட்டி குறைப்பு நடுத்தர மக்களுக்கு எளிதில் சென்றடையும்.  ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பின் பயனை மக்களுக்கு நேரடியாக எஸ்பிஐ வழங்குகிறது” எனத் தெரிவித்தார்.