வணிகம்

தமிழகத்தில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு

தமிழகத்தில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு

JustinDurai

தமிழகத்தில் நேரடி அன்னிய முதலீடு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் 18.43 சதவிகிதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீடு 8 ஆயிரத்து 364 கோடி ரூபாயாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் இதே காலக்கட்டத்தில் அன்னிய நேரடி முதலீடு 7 ஆயிரத்து 62 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. தமிழகத்தில் முதலீடு அதிகரித்திருந்தாலும் இது இந்தியாவில் செய்யப்பட்ட மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் வெறும் 4 சதவிகிதம் மட்டுமே. மொத்த அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மற்றும் டெல்லிக்கு அடுத்த 5வது இடத்திலேயே தமிழகம் உள்ளது.

எனினும் இந்த புள்ளிவிவரங்கள் தமிழகத்தில் செய்யப்படும் முதலீட்டை சரியாக கணக்கிடுவதாக எடுத்துக்கொள்ள முடியாது என்கின்றனர் அதிகாரிகள். மும்பை, டெல்லியை தலைமையிடமாக கொண்ட பல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதாகும் அந்த முதலீடுகள் அந்த மாநிலத்தில் செய்யப்பட்டவையாக பதிவாவதாக கூறுகின்றனர்.