இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் லாபம் 30% குறைந்துள்ளது.
கடந்த செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் லாபம் 2 ஆயிரத்து 71 கோடி ரூபாயாக இருந்தது. ஐசிஐசிஐயின் பொதுக்காப்பீட்டு பிரிவு பங்குகளை விற்றதில் கடந்தாண்டு கிடைத்த பெரிய லாபம் இந்தாண்டு இல்லாமல் போனதே லாபம் கணிசமாக குறைய முக்கிய காரணம் என அவ்வங்கியின் தலைவர் சந்தா கோச்சர் தெரிவித்துள்ளார்.