வணிகம்

ஜனவரி மாதத்தில் 1.20 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

ஜனவரி மாதத்தில் 1.20 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்

Rasus

ஜனவரி மாதத்தில், இதுவரை இல்லாத அளவாக ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சத்துக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

அனைத்து வரி முறைகளையும் எளிமைப்படுத்தும் வகையில், கடந்த 2017-ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி எனும் ஜிஎஸ்டி வரிமுறை இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சரிவடைந்த ஜிஎஸ்டி வசூல் தற்போது அதிகரித்து வருகிறது.

ஜனவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்று மாலை 6 மணி வரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 847 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இதுகடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை கிடைத்த வருவாயைவிட 8 சதவிகிதம் அதிகமாகும்.

கொரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு, கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஜிஎஸ்டி வசூலாகி வருவது குறிப்பிடத்தக்கது.