வணிகம்

கிரிப்டோகரன்சிக்கு 28% வரி விதிப்பு? ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலனை

கிரிப்டோகரன்சிக்கு 28% வரி விதிப்பு? ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலனை

JustinDurai

கிரிப்டோகரன்சிகள் மற்றும் அதன் தொடர்புடைய சேவைகளுக்கு 28 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவிலும் கிரிப்டோகரன்சியை ஒழுங்குப்படுத்த சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனிடையே 2022-2023ஆம்  நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பில் கிரிப்டோகரன்சியை ஒழுங்குப்படுத்தும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அந்த அறிவிப்பில் மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என்றும் மெய்நிகர் சொத்துகள் பரிமாற்றத்திற்கு ஒரு சதவீத வரி பிடித்தம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கிரிப்டோகரன்சிகள் மற்றும் அதன் தொடர்புடைய சேவைகளுக்கு 28 சதவீத வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் நுகர்வோரின் புகார்களைத் தீர்ப்பதற்கு ஒருங்கிணைப்பாளர் கொண்ட குழுவை அமைப்பது கட்டாயமாக்கப்படும் எனவும் தெரிகிறது. இதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில் நடத்தும் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. எனினும் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இதையும் படிக்கலாம்:ல்ஐசி பங்கு விற்பனை அமோகம் - 60 லட்சம் பேர் விண்ணப்பிப்பு