வணிகம்

ஒரே நாளில் ரூ.528 உயர்ந்த தங்கம் விலை - சவரன் ரூ.31,432-க்கு விற்பனை

ஒரே நாளில் ரூ.528 உயர்ந்த தங்கம் விலை - சவரன் ரூ.31,432-க்கு விற்பனை

webteam

சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 528 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 66 ரூபாய் விலை உயர்ந்து 3 ஆயிரத்து 929 ரூபாய்க்கும், ஒரு சவரன் 528 ரூபாய் விலை அதிகரித்து 31 ஆயிரத்து 432 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு ஒரு ரூபாய் 40 காசு விலை அதிகரித்து 52 ரூபாய் 60 காசுக்கு விற்பனையாகிறது. அமெரிக்கா - ஈரான் இடையிலான போர்ப்பதற்றமே தங்கம் விலை இதுவரை இல்லாத அளவிற்கு ஏற்றம் கண்டதற்குக் காரணமா‌கக் கூறப்படுகிறது.

ஆண்டு தொடக்க நாளான ஜனவரி ஒன்றாம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 29 ஆயிரத்து 880 ரூபாய்க்கு வி‌ற்பனை செய்யப்பட்டது. அடுத்த நாள் தங்கம் ஒரு சவரன் 29 ஆயிரத்து 888 ரூபாய்க்கும், ஜனவரி 3 ஆம் தேதி ஒரு சவரன் 30‌ ஆயிரத்து 520 ரூபாய்க்கும் விற்‌பனை செய்யப்பட்டது. ஜனவரி 4ஆம் தேதி ஒரு சவரன் 30 ஆயிரத்து 65‌6 ரூபாய்க்கும், ஜனவரி 6ஆம் தேதி ஒரு சவரன் 31 ஆயிரத்து 168 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில், ஜனவரி 8ஆம் தேதி ஒரு சவரன் 31 ஆயிரத்து 432 ரூபாய் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது‌. இவ்வாறாக ஆண்டு தொடங்கியது முதல் இதுவரையான 8 நாட்களில் தங்கம் சவரனுக்கு ஆயிரத்து 552 ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது.