தங்கத்தின் விலை 32 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும்?
2013 முதல் தங்கத்தின் விலை குறைந்துவந்த நிலையில் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லத் தொடங்கி உள்ளது. சர்வதேச சந்தைகளில் கடந்த 5 ஆண்டுகளில் 25 சதவிகிதம் வரை தங்கம் விலை உயர்ந்துள்ளதாகவும், ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரிப்பது, உள்ளூர் சந்தையிலும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள தங்கத்தின் விலை உயர்வு, கடந்த காலத்தில் ஏற்பட்ட விலை அதிகரிப்பைப் போன்றதல்ல எனவும் இந்த விலை உயர்வு சில ஆண்டுகள் நீடிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கச்சா எண்ணெய் விலை குறைந்து காணப்படுவது சற்றே ஆறுதல் அளித்தாலும் அது பெரிய அளவில் தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தேவையின் அடிப்படையில் தங்கத்தை வாங்குவதே தற்போதைய நிலையில் சிறந்ததாக இருக்கும் என்று நடுத்தர குடும்பத்தினரை நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.