வணிகம்

பிளிப்கார்ட் நிறுவனம் 2023-ல் 70 பில்லியன் டாலர் வரை ஐபிஓ வெளியிட திட்டம்?

பிளிப்கார்ட் நிறுவனம் 2023-ல் 70 பில்லியன் டாலர் வரை ஐபிஓ வெளியிட திட்டம்?

webteam

பிளிப்கார்ட் நிறுவனம் அடுத்த ஆண்டு அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிட (ஐபிஓ) திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பிளிப்கார்ட் நிறுவனம் அடுத்த ஆண்டு அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிட (ஐபிஓ) திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஐபிஓ வெளியாகும் சமயத்தில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 60 பில்லியன் டாலர் முதல் 70 பில்லியன் டாலர் வரை இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு க்ளியர்ட்ரிப் என்னும் நிறுவனம் டிராவல் நிறுவனத்தை பிளிப்கார்ட் வாங்கியது. மேலும் ஹெல்த் பிளஸ் என்னும் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்திருப்பதாக தெரிகிறது.

பிளிப்கார்ட் சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட நிறுவனம். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் பட்டியலிட இருப்பதாக தெரிகிறது.

அமெரிக்காவை சேர்ந்த வால்மார்ட் குழுமம் பிளிப்கார்ட் நிறுவனத்தில் 77 சதவீத பங்குகளை வாங்கியது. கடந்த ஆண்டு 3.6 பில்லியன் டாலர் நிதி திரட்டியபோது நிறுவனத்தின் சந்தை மதிப்பு 37.6 பில்லியன் டாலர்களாக இருந்தது.