வணிகம்

பெட்ரோல், டீசல் மீதான கலால்வரி வருவாய் ரூ 3.71 லட்சம் கோடி- மத்திய அரசு

பெட்ரோல், டீசல் மீதான கலால்வரி வருவாய் ரூ 3.71 லட்சம் கோடி- மத்திய அரசு

Sinekadhara

கடந்த நிதியாண்டில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வருவாய் 3 லட்சத்து 71 ஆயிரம் கோடியாக இருந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் மீது கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021 மார்ச் மாதம் வரை கிடைத்த கலால் வரி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2016-2017ஆம் நிதியாண்டில் 2 லட்சத்து 22 ஆயிரம் கோடியாக இருந்த கலால் வரி வருவாய், 2017-2018ஆம் நிதியாண்டில் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. 2018-2019ஆம் நிதியாண்டில் 2 லட்சத்து 13 ஆயிரம் கோடியாகவும் 2019-2020ஆம் நிதியாண்டில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடியாகவும் குறைந்தது.

இதுவே கடந்த நிதியாண்டில் 3 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்வு கண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூலம் 3 லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்த நிலையில், மாநிலங்களுக்கு 19 ஆயிரத்து 972 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.