வருங்கால வைப்பு நிதியான பிஎஃப் பணத்தைக் கொண்டு சொந்த வீடு வாங்குவதற்கான வசதியை இபிஎப்ஓ(EBFO)அமைப்பு ஏப்ரலில் அறிமுகம்செ செய்யவுள்ளது.
இந்த திட்டம் அமலுக்கு வந்தால் 4 கோடி பிஎஃப் சந்தாதாரர்கள் சொந்த வீடு வாங்க வழியேற்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. வீடு வாங்குவதற்கான முன்பணத்தை தொழிலாளர்களின் பிஎஃப் பணத்தில் இருந்து எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவதுடன், வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையையும் பிஎஃப் மாத சந்தாவில் இருந்து செலுத்த இந்த திட்டம் அனுமதிக்கும் எனத் தெரிகிறது.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக இதற்கான அறிவிப்பு தள்ளிப் போவதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.