வணிகம்

மத்திய பட்ஜெட்டில் மின்னணு பரிவர்த்தனைக்கு ஊக்கம் ! 

மத்திய பட்ஜெட்டில் மின்னணு பரிவர்த்தனைக்கு ஊக்கம் ! 

webteam

ரொக்க பரிவர்த்தனைகளைக் குறைத்து மின்னணு பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

கருப்புப் பணம் மற்றும் கணக்கில் வராத பண நடமாட்டத்தைத் தவிர்க்கும் வகையில், மின்னணு பணப் பரிமாற்ற முறைகளுக்கு மத்திய பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நிறுவனங்கள் மின்னணு பரிவர்த்தனை வழிகளை வாடிக்கையாளருக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. Bhim UPI, UPI-QR Code, Aadhaar Pay, டெபிட் கார்டு, NEFT, RTGS ஆகிய வழிகளில் மின்னணு பரிவர்த்தனை வழியை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

மின்னணு பணப் பரிமாற்ற முறைகளுக்கு அந்நிறுவனங்களின் சேவைக் கட்டணம் பெறப்படாது என்றும் கட்டணச் செலவை வங்கிகளும், ரிசர்வ் வங்கியும் ஏற்றுக் கொள்ளும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்கள் சேவைக் கட்டணம் அளிக்க வேண்டியிருக்காது. மேலும், ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைக்கும் வகையில், ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வங்கியில் இருந்து எடுக்கப்படும் தொகை மீது 2% வரியை மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.