நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யின் 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்வதற்கான வரைவு ஆவணங்கள் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 31.6 கோடி பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் சுமார் 63 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பங்கு வெளியீடு அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஐசி நிறுவன ஊழியர்கள் மற்றும் அந்நிறுவன பாலிஸி வைத்திருப்போருக்கு பங்கு விலையில் தள்ளுபடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களுக்கும், காப்பீடு செய்துள்ளவர்களுக்கும் எவ்வளவு பங்குகள் ஒதுக்கப்ப்டும் என்பது அரசு தாக்கல் செய்த வரைவு ஆவணங்களில் இல்லை. எல்ஐசி நிறுவன பங்குகளின் விற்பனை இந்திய வரலாற்றில் மிகப்பெரிய பங்கு விற்பனையாக இருக்கும். இதற்குமுன் பேடிஎம் நிறுவனம் பங்குகள் வெளியீட்டின் மூலம் திரட்டிய 18,300 கோடியே அதிகபட்சமாக இருந்தது.