கச்சா, சமையல் எண்ணெய் வகைகளுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
எள், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ள இந்திய விவசாயிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன்படி கச்சா பாமாயிலுக்கான இறக்குமதி வரி 15 சதவிகிதத்தில் இருந்து 30 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கச்சா சூரியகாந்தி, சோயா எண்ணெய்க்கான வரி 20ல் இருந்து 40 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய கலால் மற்றும் சுங்க வரி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.