வணிகம்

செல்ஃபோன் அழைப்புக் கட்டணங்கள் உயர்கிறது?

செல்ஃபோன் அழைப்புக் கட்டணங்கள் உயர்கிறது?

webteam

செல்ஃபோன் அழைப்பு இணைப்பு கட்டணங்களை அதிகரிக்க அனுமதி அளிக்குமாறு டிராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஏர்டெல், வோடாஃபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
 தற்போது செல்ஃபோன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பிற செல்ஃபோன் நிறுவன வாடிக்கையாளர்கள் மூலம் வரும் அழைப்புக்கு இணைப்பு கட்டணமாக நிமிடத்துக்கு 14 காசுகள் வசூலிக்கின்றன. இதை 30 முதல் 35 காசுகளாக அதிகரிக்க செல்ஃபோன் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் செல்ஃபோன் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது. செல்போன் நிறுவனங்கள் போட்டிபோட்டு பல்வேறு சலுகைகளை அறிவித்து வரும் நிலையில்,  இணைப்புக்கான கட்டணங்களை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.