வணிகம்

பிசிசிஐ-ன் தலைமை நிதியளிப்பாளராகிய ‘பே-டிஎம்’

பிசிசிஐ-ன் தலைமை நிதியளிப்பாளராகிய ‘பே-டிஎம்’

webteam

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிதியளிப்பாளராக 5 வருடத்திற்கு பே-டிஎம் (Paytm) நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் இன்று பிசிசிஐ-யின் தலைமை நிதியளிப்பாளர் உரிமம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிசிசிஐக்கு 2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான தலைமை நிதியளிப்பாளர் பொறுப்பு பே-டிஎம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அதன்படி இனி இந்திய அணி விளையாடும் சர்வதேச போட்டிகள் மற்றும் இந்திய அளவிலான போட்டிகள் அனைத்திற்கும் பே-டிஎம் நிதியளிப்பாளராக இருக்கும்.

5 வருடத்தில் பெரும் வெற்றிகளுக்கு வழங்கப்படும் தொகையாக ரூ.326.80 கோடி முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த முறை ஒரு போட்டியின் வெற்றித் தொகையாக இருந்த ரூ.2.4 கோடி தற்போது 58% உயர்த்தப்பட்டு ரூ.3.80 கோடி ஆகியுள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேசிய பிசிசிஐ தலைமை நிர்வாகி ராகுல் ஜோரி, பிசிசிஐயின் தலைமை நிதியளிப்பாளராக பே-டிஎம் அறிவிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். அத்துடன் பே-டிஎம் உடன் ஒப்பந்தம் செய்ததில் பிசிசிஐ பெருமை அடைவதாகவும் கூறினார். 

பே-டிஎம் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி விஜய் சேகர் கூறும்போது, நீண்ட தூரம் இந்திய அணி மற்றும் பிசிசிஐ உடன் பயணிக்கவுள்ளது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.