வணிகம்

வங்கிகள் தனியார்மயமாவதற்கு எதிர்ப்பு: இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

வங்கிகள் தனியார்மயமாவதற்கு எதிர்ப்பு: இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

webteam

வங்கிகள் தனியார்மயமாவதை எதித்து இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பங்கு விலக்கல் திட்டத்தில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்தார். மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், இன்றும் நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். மார்ச் 13, 14 ஆம் தேதி வங்கிக்கு விடுமுறை நாளாக அமைந்துவிட்டது. இன்றும், நாளையும் வேலை நிறுத்தம் என்பதால், சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள் வங்கிகள் செயல்படத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.