ஹாப்பியஸ்ட் ஹெல்த் நிறுவனத்தை அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் ஐபிஒ வெளியிட இருப்பதாக சூட்டா தெரிவித்திருக்கிறார்.
79 வயதாகும் அசோக் சூட்டா மூன்றாவது நிறுவனத்தை ஐபிஓ கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். டெக்னாலஜி துறையில் 40 ஆண்டுகளுக்கு மேல் அனுபவமிக்கவர் இவர். இதற்கு முன்பாக இரு நிறுவனங்களின் ஐபிஓவை தலைமையேற்று நடத்தி இருக்கிறார்.
அசோக் சூட்டா தலைவராக இருக்கும்போதுதான் மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் ஐபிஓ கடந்த 2007-ம் ஆண்டு வெளியானது. அதிலிருந்து விலகி இவர் தொடங்கிய நிறுவனம்தான் ஹாப்பியஸ்ட் மைண்ட்ஸ். இந்த நிறுவனத்தின் ஐபிஒ கடந்த் 2020-ம் ஆண்டு வெளியானது. மைண்ட்ட்ரி நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு விப்ரோ நிறுவனத்தின் ஐடி பிரிவை 15 ஆண்டுகளுக்கு மேலாக தலைமையேற்று நடத்தி வந்தார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஹாப்பியஸ்ட் ஹெல்த் என்னும் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். ஹெல்த் மற்றும் வெல்னெஸ்க்காக தொடங்கப்பட்டிருக்கிறது இந்த நிறுவனம். 90 பணியாளர்கள் உள்ளன. இந்த நிறுவனத்தை அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் ஐபிஒ வெளியிட இருப்பதாக சூட்டா தெரிவித்திருக்கிறார்.
1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மைண்ட்ட்ரீ 2007-ம் ஆண்டு ஐபிஓ கொண்டுவரப்பட்டது. இங்கிருந்து விலகி 2011-ம் ஆண்டு ஹாப்பியஸ்ட் மைண்ட்ஸ் தொடங்கினார். இதன் ஐபிஓ 2020-ம் ஆண்டு வெளியானது. தற்போது ஹாப்பியஸ்ட் ஹெல்த் என்னும் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
இதையும் படிக்க: ராயல் என்ஃபீல்ட் ரக பைக்குளில் இதான் விலை கம்மி!’- ஹண்டர் 350 மாடலின் விலை என்ன தெரியுமா?