இந்தியாவின் முன்னணி உணவு பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று அமுல். பல லட்ச கணக்கிலான பால் உற்பத்தியாளர்களிடம் (சுமார் 2.8 மில்லியன் பேர்) இருந்து பல லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் பெற்று வருகிறது அமுல். இந்த நிலையில் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் உயர்த்தி உள்ளது அமுல்.
நாளை (மார்ச் 1) முதல் இந்த விலை ஏற்றம் நடைமுறைக்கு வரும் எனவும் அமுல் தெரிவித்துள்ளது. எரிபொருள், பேக்கேஜிங் செலவு, போக்குவரத்து செலவு, கால்நடை தீவனம் முதலியவற்றின் விலை உயர்வு காரணமாக பால் விலையை உயர்த்தி உள்ளதாக அமுல் விளக்கம் கொடுத்துள்ளது.
கடைசியாக கடந்த 2021 ஜூலையில் பால் விலையை அமுல் உயர்த்தி இருந்தது. இந்த விலை உயர்வு பால் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தியை அதிகரிக்க ஊக்கம் கொடுக்கும் எனவும் அமுல் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் பால் விலையில் 4 சதவிகிதம் மட்டுமே உயர்த்தி உள்ளதாகவும் அமுல் தெரிவித்துள்ளது.