வணிகம்

ஃபியூச்சர் நிறுவன ஒப்பந்தம் ரத்து - அமேசான் நிறுவனத்திற்கு ரூ. 202 கோடி அபராதம்

ஃபியூச்சர் நிறுவன ஒப்பந்தம் ரத்து - அமேசான் நிறுவனத்திற்கு ரூ. 202 கோடி அபராதம்

Veeramani

ஃபியூச்சர் ரீடெய்ல் நிறுவன முதலீடு தொடர்பான வழக்கில் அமேசான் நிறுவனத்திற்கு 202 கோடி ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது.

ஃபியூச்சர் ரீடெய்ல் லிமிடெட்டின் ஒரு பிரிவான ஃபியூச்சர் கூப்பன்களுடன் அமேசான் நிறுவனம் செய்துகொண்ட 2019ஆம் ஆண்டின் ஒப்பந்தத்திற்கான அனுமதியை இந்திய வணிகப்போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (சிசிஐ) ரத்து செய்துள்ளது. மேலும், முதலீடு தொடர்பான தகவல்களை முழுமையாக அளிக்காமல் மறைத்த புகாரின் பேரில்  அமேசான் நிறுவனத்திற்கு ரூ.202 கோடி அபராதமும் விதித்துள்ளது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL) உடனான ரூ. 24,713 கோடி ஒப்பந்தம் தொடர்பாக அமேசான் மற்றும் ஃபியூச்சர் குழுமத்திற்கு இடையே நடந்த கடுமையான சட்டப் போராட்டத்திற்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக,  "இந்திய வணிகப்போட்டி ஒழுங்குமுறை ஆணையம் அளித்த உத்தரவை நாங்கள் மதிப்பாய்வு செய்து வருகிறோம், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்வோம்" என்று அமேசான் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.