வணிகம்

''என்ன.. ஹிட்லர் மீசையா?'' - பதறியடித்து ஐகானை மாற்றிய அமேசான்!

''என்ன.. ஹிட்லர் மீசையா?'' - பதறியடித்து ஐகானை மாற்றிய அமேசான்!

webteam

ஹிட்லர் மீசைபோல உள்ளதாக இணையத்தில் கிண்டலுக்கு உள்ளான அமேசான் லோகோவை அந்நிறுவனம் மாற்றியுள்ளது

ஆன்லைன் ஷாப்பிங்கில் கொடிகட்டிப்பறக்கும் நிறுவனம் அமேசான். இந்த நிறுவனம் சமீபத்தில் தங்களுடைய போன் ஐகானை மாற்றியது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரியில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தது அமேசான். வழக்கமான ஸ்மைலிங் சிம்பலுக்கு மேல் ரிப்பன்போல் ஒரு லோகோவை அறிமுகம் செய்தது. ஆனால் அந்த ரிப்பனை பார்க்கும் போது ஹிட்லரின் மீசையைபோல இருப்பதாக இணையத்தில் பலரும் பதிவிட்டனர். தொடர்ந்து கிண்டலுக்கு உள்ளானதை அடுத்து தனது புதிய லோகோவை உடனடியாக மாற்றியுள்ளது அமேசான். ரிப்பனுக்கு பதிலாக வேறு ஒரு மாடலை அது மாற்றியுள்ளது.

இந்த புது ஐகான் குறித்து சிஎன்என்க்கு பேசிய அமேசான் செய்திதொடர்பாளர் ''வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைபேசியில் ஷாப்பிங் பயணத்தைத் தொடங்கும்போது எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியைத் தூண்டுவதற்காக புதிய ஐகானை வடிவமைத்துள்ளோம். எங்கள் பார்சலை அவர்கள் வீட்டு வாசலில் பார்க்கும்போது அவர்களுக்கு அது உற்சாகத்தை கொடுப்பதாக இருக்கும்'' என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய மிந்த்ரா லோகோவும் தன்னுடைய ஐகானை மாற்றியது குறிப்பிடத்தக்கது