காப்பீடு துறையில் 74 சதவிகிதம் வரை அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
காப்பீடு துறையில், அதிகபட்ச அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவிகிதத்தில் இருந்து 74 சதவிகிதமாக உயர்த்தும் மசோதா கடந்த வாரம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் இந்த மசோதாவை நிதி அமைச்சரர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 2015 ஆம் ஆண்டு முதல் காப்பீடு துறையில் ரூ.26,000 கோடி அந்நிய முதலீடு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.