விவசாயம்

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கான விவசாயிகளின் எதிர்பார்ப்புகள்

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கான விவசாயிகளின் எதிர்பார்ப்புகள்

நிவேதா ஜெகராஜா

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வேளாண் உற்பத்திப் பொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

2021-22 நிதியாண்டில், மத்திய நிதிநிலை அறிக்கையில் விவசாயத்துறை அமைச்சகம், கூட்டுறவுத்துறை, விவசாயிகள் நலத்துறை, விவசாய ஆராய்ச்சி மற்றும் விவசாய கல்வி, ரசாயனங்கள் மற்றும் உரத்துறையில் உரத்துக்கான மானியம் ஆகியவற்றுக்கு 2 கோடியே 67 லட்சத்து 840 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்குவது, குறைந்த வட்டிக்கான மானியம், விவசாய காப்பீடு மற்றும் கொள்முதல் விலைக்கான செலவு அடக்கம். மேலும் உரங்களுக்கான மானியத்துக்காக 1.4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 3 ஆயிரம் ரூபாயாக அறிவிக்க வேண்டும், உளுந்து, பச்சைப்பயிறு, கரும்பு உள்ளிட்ட அனைத்து விளைபொருளுக்கும் ஆதாரவிலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள் விவசாயிகள். மேலும் பல எதிர்பார்ப்புகளும் விவசாயிகள் மத்தியில் இருக்கின்றன.

உரங்களுக்கு ஏற்கெனவே மானியம் அளிக்கப்படும் நிலையில், உரங்கள், இடுபொருட்களுக்கான விலை அதிகரிப்பு , உற்பத்திச் செலவை அதிகரிப்பதால், விவசாயத்தை ஊக்குவிக்கும்வகையில் மானியம் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் விவசாயிகள் மத்தியில் இருக்கிறது.