விவசாயம்

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: பாஜக எம்.பி.க்கு ‘கோதுமை கொத்து’ கொடுத்த ஹர்சிம்ரத் கவுர்

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: பாஜக எம்.பி.க்கு ‘கோதுமை கொத்து’ கொடுத்த ஹர்சிம்ரத் கவுர்

webteam

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்தின் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் அகாலி தளத்தின் எம்.பி.யான ஹர்சிம்ரத் கவுர் பாதல், பாஜக எம்.பி.யான ஹேமமாலினிக்கு 'கோதுமை கொத்து' கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் முன்பு முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய எம்.பியுமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது ஆதரவாளர்களுடன் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது நாடாளுமன்றத்திற்கு வந்த பாஜக எம்.பி. ஹேமமாலினிக்கு, அகாலி தளத்தின் எம்.பி.யான ஹர்சிம்ரத் கவுர் பாதல் 'கோதுமை கொத்து' கொடுத்தார். முதலில் அதை வாங்கி கொண்ட ஹேமமாலினி சற்று நேரம் ஒன்றும் புரியாதது போல் நிற்கிறார். பின்னர், பலகையை காண்பித்ததும் அங்கிருந்து சிரித்துக்கொண்டே நகர்ந்து செல்கிறார்.


இதுகுறித்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் எம்.பி கூறுகையில், “எங்களை யாரும் கூப்பிடவில்லை. புதிய வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. இதுகுறித்த விவாதத்திலிருந்து மத்திய அரசு ஏன் பின்வாங்குகிறது. இது ஒரு சர்வாதிகார அரசு” எனத் தெரிவித்தார்.