விவசாயம்

இயற்கை சீற்றங்களை வென்று மகசூல் தந்த 'நெல் ஜெயராமனின்' 100 பாரம்பரிய நெல் வகைகள்

இயற்கை சீற்றங்களை வென்று மகசூல் தந்த 'நெல் ஜெயராமனின்' 100 பாரம்பரிய நெல் வகைகள்

Veeramani

மறைந்த நெல் ஜெயராமனால் மீட்டெடுக்கப்பட்ட 100 வகையான பாரம்பரிய நெற்பயிர்கள் திருவாரூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டு இயற்கை சீற்றத்தையும் தாண்டி நல்ல மகசூலை கொடுத்துள்ளது.

திருவாரூர் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் என்ற இடத்தில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய வேளாண் பண்ணை உள்ளது. இங்கு மாப்பிள்ளை சம்பா, காட்டுயாணம், சீரக சம்பா, கல்லுருண்டை சம்பா, சிவப்பு கவுனி, மஞ்சள் பொன்னி, சிறு மிளகி, குடவாளை, தங்க சம்பா, ஆத்தூர் கிச்சிலி சம்பா, கருவாச்சி, நீல சம்பா உள்ளிட்ட 100 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டன. இந்த பயிர்கள், அண்மையில் பெய்த வரலாறு காணாத மழையையும், இயற்கை சீற்றத்தையும் தாண்டி நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது.

அறுவடை செய்யப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள், வரும் மே மாதம் நடைபெற உள்ள தேசிய நெல் திருவிழாவில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன. ரசாயன சாகுபடி மேற்கொள்வதற்கு பதிலாக, இதுபோன்ற பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட அனைவரும் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.