பொள்ளாச்சி அருகே நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என ஆனைமலை நெல் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயத்தில் உள்ள பள்ளிவிலங்கால், காரப்பட்டி, பெரியனை, அறியாபுரம், வடக்கலூர் அம்மன் ஆகிய ஐந்து கால்வாய்களை ஆதரமாகக் கொண்டு 3,400 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். இங்கு பயிரிடப்படும் நெல்லை கொள்முதல் செய்ய, தங்கள் பகுதிக்கு ஒரு அரசு கொள்முதல் நிலையம் வேண்டும் என்று பல வருடங்களாக விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து வௌர்கின்றனர். அதைத்தொடர்ந்து, தற்போது ஆனைமலை பகுதியில் புதிதாக நெல் கொள்முதல் நிலையத்தை அரசு துவங்கியுள்ளது.
தொடர்புடைய செய்தி: பருத்தி முதல் நெல் வரை... உயர்த்தப்பட்ட அடிப்படை ஆதார விலை எவ்வளவு? - முழு விவரம்
இங்கு விவசாயிகள் கொண்டுவரும் ஒரு குவின்டால் சண்ணரக நெல்லிற்கு ரூ. 1,958-ம்; மோட்டா ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,900 -ம் அரசு ஆதார விலையை நிர்ணயித்தது. தற்போது அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஆதார விலை மிகவும் குறைவாக உள்ளதாகவும். சண்ணரக நெல் ஒரு குவிண்டாலுக்கு 2, 500 ரூபாயும்; மோட்டா ரக நெல் குவிண்டாலுக்கு 2,450 ரூபாயும் விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் அரசு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தனியார் கருது அறுக்கும் இயந்திரத்திற்கு 3,000ரூபாய் வரை வாடகை கொடுப்பதாகவும், எனவே அரசு ஆனைமலை பகுதிக்கு அரசு சார்பில் கருது அறுக்கும் இயந்திரம் கொண்டுவந்தால் குறைந்த விலையில் அந்த இயந்தரத்தை நாங்கள் பயன்படுத்தி கொள்வோம் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.