farmer pt desk
விவசாயம்

நீலகிரியில் துவங்கிய முள் சீத்தாப்பழ சீசன்... கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கூடலூரில் மருத்துவ குணமிக்க முள் சீத்தாப்பழம் சீசன் துவங்கியுள்ள நிலையில், அறுவடை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

webteam

நீலகிரி மாவட்டம் கூடலூரில் மருத்துவ குணம் மிக்க முள் சீத்தாப்பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. இந்த பழங்கள் புற்றுநோய்களுக்கு சிகிச்சையின்போதுகூட எடுத்துக்கொள்ளும் வகையிலான உணவென கூறப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடலூருக்கு வரும் மக்கள் இந்த பழங்களை வாங்கிச் செல்கிறார்கள்.

Mullu Seetha

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான முள் சீத்தாப்பழ சீசன் தற்போது துவங்கியுள்ளது. இதையடுத்து பழங்களை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயிகளிடம் இருந்து கிலோ 50 ரூபாய் வரை கொடுத்து வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். பராமரிப்பு தேவைப்படாத இந்த வகை மரங்கள் விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தருகிறது.