விவசாயம்

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா  – இரு அவைகளிலும் நிறைவேற்றம்

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா  – இரு அவைகளிலும் நிறைவேற்றம்

Veeramani

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இன்று காலை மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாக்களை மக்களவையில் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.

இதனிடையே குறைந்தபட்ச ஆதார விலை குறித்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.