இந்த விவசாயிகள் போராட்டம் நடத்தப்படாவிட்டால், விரைவில் நாடு விற்கப்படும், அடுத்த 20 ஆண்டுகளில் உங்கள் நிலத்தை இழப்பீர்கள் என்று பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) தலைவர் ராகேஷ் டிக்கைட் குற்றம் சாட்டினார்
கர்நாடகாவின் சிவமோகாவில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் பேசிய ராகேஷ் டிக்கைட், "டெல்லியில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் செய்கிறார்கள், இந்த போராட்டம் நீண்ட காலமாக தொடரும். இந்த 3 கறுப்புச் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை ஒவ்வொரு நகரத்திலும் இத்தகைய போராட்டத்தைத் தொடங்க வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலை மீதான சட்டம் இதுவரை கொண்டு வரப்படவில்லை. " என்று அவர் கூறினார்.
மேலும்"நீங்கள் கர்நாடகாவில் ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும். உங்கள் நிலத்தை பறிக்க சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது, எனவே இனி பெரிய நிறுவனங்கள் விவசாயம் செய்யும். குறைந்த ஊதியத்துக்கு உழைப்பைப் பயன்படுத்த தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன." என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் "நீங்கள் பெங்களூரில் ஒரு 'டெல்லி' யை உருவாக்க வேண்டும், எல்லா பக்கங்களிலிருந்தும் போராட்டம் செய்ய வேண்டும். விவசாயிகள் பயிர்களை எங்கும் விற்கலாம் என்று பிரதமர் கூறுகிறார், எனவே உங்கள் போலீஸ் அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலில் எம்.எஸ்.பியில் பயிர்களை வாங்க வேண்டும் என விற்பனை செய்ய முயலுங்கள். இந்த விவசாயிகள் போராட்டம் நடத்தப்படாவிட்டால், விரைவில் நாடு விற்கப்படும், அடுத்த 20 ஆண்டுகளில் உங்கள் நிலத்தை இழப்பீர்கள். சுமார் 26 பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கலில் உள்ளன, இந்த விற்பனையை நிறுத்த நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும், "என்று அவர் கூறினார்.