புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி
புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் 30ஆம் தேதி தொடங்குகிறது. சட்டப்பேரவைத் தேர்தலை போன்று, தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலையும் சந்திக்கிறது. இந்த நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
அதில், தமிழக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், செம்மலை, செல்லூர் ராஜூ, பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தையில் 3கட்சிகளுக்கும் இடையே எந்த முடிவும் எட்டப்படாமல் இழுபறி நீடித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com