ஒடிசா: மகாநதி வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட யானை உயிரிழப்பு

ஒடிசா: மகாநதி வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட யானை உயிரிழப்பு
ஒடிசா: மகாநதி வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட யானை உயிரிழப்பு

ஒடிசாவில் மகா நதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 2 நாள்கள் போராடி மீட்கப்பட்ட யானை, பரிதாபமாக உயிரிழந்தது. மீட்புப்பணியின்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மீட்புப்படை வீரர் ஒருவர் மற்றும் மீட்புப் படையினருடன் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் ஒருவரும் உயிரிழந்தனர்.

கடந்த வெள்ளியன்று மகாநதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தைக் கடக்க முயன்ற காட்டு யானை ஒன்று, கட்டாக் என்ற இடத்தில் அடித்துச் செல்லப் பட்டது. சீற்றத்துடன் பெருகிய மகாநதியின் வெள்ளத்தில் சிக்கிய யானை, கரைசேர முடியாமல் தத்தளித்தது.

காட்டு யானை வெள்ளத்தில் சிக்கியது பற்றி மக்கள் அளித்த தகவலின்பேரில், தேசிய மற்றும் மாநில பேரிடம் மீட்புக் குழுவினர் முத்தாலி பாலம் என்ற பகுதிக்கு விரைந்தனர். காட்டு யானையை கரைக்கு விரட்ட முற்பட்டனர். அப்போது, அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்த யானை மீண்டும் ஆற்றின் நடுப்பகுதிக்குச் சென்றது. இதனால் யானையை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே, மீட்புப் பணிக்காக சென்ற படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. மீட்புப்பணிகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அரிந்தம் தாஸ் என்பவர் உயிரிழந்தார். 2 நாள்கள் இரவு பகலாக மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட யானை உயிரிழந்துவிட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மீட்புப் பணிகளின்போது மாநில பேரிடர் மீட்புக்குழு வீரர் ஒருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com