பட்டாசு வெடிக்கும் நேரத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றத்தில் மனு அளித்த உற்பத்தியாளர்கள் சங்கம்

பட்டாசு வெடிக்கும் நேரத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றத்தில் மனு அளித்த உற்பத்தியாளர்கள் சங்கம்
பட்டாசு வெடிக்கும் நேரத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றத்தில் மனு அளித்த உற்பத்தியாளர்கள் சங்கம்

பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க கோரி தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைவதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீபாவளி நாளில் காலை ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதியளித்தது. பகல் நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை என தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக் கோரி தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், காலையில் 4 மணி நேரமும், மாலையில் 4 மணி நேரமும் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

மேலும், பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்வதற்கும் தயாராக இருப்பதாகவும், அதற்கும் அனுமதி தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை விரைவில் வரவிருக்கும் சூழலில், தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்திருக்கும் இந்த மனு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com