சென்னை விமான நிலையத்தில் ரூ. 66 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 66 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ. 66 லட்சம் தங்கம் பறிமுதல்
இருவேறு நிகழ்வுகளில் மொத்தம் ரூ. 66.34 லட்சம் மதிப்பில் 1,588 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் செய்ததோடு, பயணி ஒருவரை கைது செய்தனர். 
உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் துபாயிலிருந்து சென்னை வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரது உடமைகளை ஸ்கேன் செய்து பார்த்தபோது இரும்பு சுத்தியல் ஒன்றில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, சுத்தியலை உடைத்துப் பார்த்தபோது, இரும்பு சுத்தியலுக்குள் தங்கம் இருந்தது தெரிய வந்தது. சுங்கச் சட்டம் 1962-இன் கீழ் ரூ. 14.25 லட்சம் மதிப்பில் 341 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மற்றொரு நிகழ்வில், குவைத் நாட்டில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவர் கொண்டு வந்திருந்த கண்ணாடி சட்டத்தில் (Mirror frame) மறைத்து வைக்கப்பட்டிருந்த 1247 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. கண்ணாடி சட்டத்தை உடைத்தால் மட்டுமே வெளியில் எடுக்கும் வகையில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. ரூ. 52.09 லட்சம் மதிப்பில் 1247 கிராம் தங்கம் சுங்கச் சட்டம், 1962-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பயணி கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com