“இந்தியா - பாகிஸ்தான் தொடர் இனி நடக்க வாய்ப்பே இல்லை என்பது கசப்பான உண்மை” -உஸ்மான் கவாஜா

“இந்தியா - பாகிஸ்தான் தொடர் இனி நடக்க வாய்ப்பே இல்லை என்பது கசப்பான உண்மை” -உஸ்மான் கவாஜா
“இந்தியா - பாகிஸ்தான் தொடர் இனி நடக்க வாய்ப்பே இல்லை என்பது கசப்பான உண்மை” -உஸ்மான் கவாஜா

இந்திய கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் இருதரப்பு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்களில் விளையாடாமல் இருப்பது கிரிக்கெட் உலகம் ரொம்பமவே மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா. 

இவர் பாகிஸ்தானில் பிறந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வருகிறார். 

“சர்வதேச கிரிக்கெட் களத்தில் நான் மிகவும் மிஸ் செய்வது இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடும் நேரடி தொடர்களை தான். சிறு வயது முதலே எங்கள் வீட்டில் என் அப்பாவுடன் இரு அணிகளும் மோதி விளையாடுவதை நான் பார்த்து வருகிறேன். 

இந்தியா - பாகிஸ்தான் தொடர் இனி நடக்க வாய்ப்பே இல்லை என்ற கசப்பான உண்மையை நான் வெறுக்கிறேன். அந்த அணிகள் விளையாடாமல் இருப்பது கிரிக்கெட் உலகமும் அதிகம் மிஸ் செய்கிறது. அது மீண்டும் நடந்தால் அற்புதமாக இருக்கும். 

அது தொடர்பாக நான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் பேசி உள்ளேன். என்னை பொறுத்தவரை இரு நாடுகளையும் ஒன்றாக இணைப்பது இந்த விளையாட்டு மட்டும் தான்” என யூடியூப் மூலம் தெரிவித்துள்ளார் அவர். 

கடைசியாக 2012-13ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அதன் பிறகு இரு அணிகளும் நேரடி தொடர்களில் விளையாடவில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com